top of page

தென்கிழக்கு ஆசிய ஆண்களுக்கான எதிர்கால தோல் பராமரிப்புக்கு வரவேற்கிறோம்!

உங்களையும் உங்கள் சருமத்தையும் அறிந்து கொள்வதில் நாங்கள் மிகவும் கிளர்ச்சியுற்றுள்ளோம். கீழே உள்ள வினாவிடையை முடிக்கவும். இவ்வினாவிடையை முடிக்க சுமார் 5-6 நிமிடங்கள் ஆகும். இந்த வினாடி வினாவை முடித்த பிறகு, உங்களுக்கு பொருத்தமான தோல் பராமரிப்பு வழக்கத்தை நாங்கள் பரிந்துரைப்போம்.

விரைவு இணைப்புகள்

குறிப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள BROskin-இன் தோல் மதிப்பீட்டு வினாடி வினா, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாடி வினா முடிவுகள் உங்கள் தோல் நிலையைப் பற்றிய தொழில்முறை மதிப்பீட்டுக்கு ஒப்பாகாது. இந்த வினாடி வினா முடிவுகள் தகுதிவாய்ந்த தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணர் வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை, சிகிச்சை மற்றும் நோயறிதல் ஆகியவற்றைக்கு மாற்று அல்ல.
  1. இந்த வினாடி வினா ஒரு சுய-மதிப்பீட்டு கருவியாகும். இது உங்கள் சரும நிலையின் அதிகாரப்பூர்வ நோய்க்குறி அல்லது முழுமையான மதிப்பீட்டுக்கு ஈடாகாது. சரும ஆரோக்கியம் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான விஷயம். எனவே இவ்வாறான சிக்கல்கள் இந்த வினாடி வினாவினால் அறியமுடியாது.
  2. வினாடி வினாவில் வழங்கப்படும் தகவல்களும், அடுத்துவரும் சரும பராமரிப்பு முறை பரிந்துரைகளும் ஒரு தகுதிவாய்ந்த தோல் நோய் மருத்துவர் அல்லது சரும பராமரிப்பு நிபுணருடன் ஆலோசனைக்கு மாற்று அல்ல. மாறாக, மிகவும் துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நோயறிதலுக்காக, இந்த தோல் மதிப்பீட்டு வினாடி வினாவின் அடிப்படையில், பயனர்கள் தங்கள் குறிப்பிட்ட தோல் கவலைகள் அல்லது நிலைமைகளுக்கு BROskin இன் தொழில்முறை ஆலோசனையை மேலும் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  3. பரிந்துரைகளில் வழங்கப்படும் சரும பராமரிப்பு முறைகள் தரநிலையானவை. இவைகளில் குறிப்பிட்ட அல்லது  தனிப்பட்ட அம்சங்களை உள்ளடக்காது. இந்த பரிந்துரைகள் பொதுவான சரும பராமரிப்பு நடைமுறைகளுக்கு ஒரு அடிப்படை சட்டகம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. எனவே, இவை தனித்துவமான அல்லது கடுமையான சரும நிலைகளை சமாளிக்க வடிவமைக்கப்படவில்லை.
  4. பரிந்துரைக்கப்படும் சரும பராமரிப்பு முறைகள் பொதுவானவை. எனவே, பரிந்துரைக்கப்பட்ட தோல் பராமரிப்பு தயாரிப்புகள் அனைவருக்கும் ஒரே முடிவுகளை அளிக்காது. சரும பராமரிப்பு தயாரிப்புகளுக்கு தனிப்பட்ட துலங்கல்கள் மாறுபடலாம். குறிப்பாக, எதிர்மறை விளைவுகள் அல்லது மாற்றங்களுக்கு உங்கள் சருமத்தை கண்காணிப்பது முக்கியம்.
  5. புதிய தயாரிப்புகளை தங்களது சரும பராமரிப்பு முறையில் சேர்ப்பதற்கு முன் பயனர்கள் எச்சரிக்கையாக இருந்து, பாத்ச் டெஸ்ட்களை (patch test) செய்வதற்கு அறிவுரைக்கப்படுகிறார்கள், குறிப்பாக அவர்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமைகளும் கூருணர்வுகளும் இருந்தால். எரிச்சல் அல்லது பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டால் பயன்பாட்டை உடனடியாக நிறுத்திவிட்டு, தொழில்முறை ஆலோசனையை தேடுங்கள்.

BROskin

இந்த இணையதளம், மலேஷியா, பினாங்கு, மலேசியா பல்கலைக்கழகத்தில் உள்ள மொழிகள், எழுத்தறிவு மற்றும் மொழிபெயர்ப்பு பள்ளியில், இளங்கலை (ஹானர்ஸ்) ஆங்கிலம், தொழில் வல்லுநர்கள் திட்ட மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளம் LEM313 பாடத்திற்கான குழு திட்ட மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இணைய அடிப்படையிலான எழுத்துக்கான ஆங்கிலம். இணையதளத்தில் இடம்பெறும் எந்தவொரு உள்ளடக்கமும் கல்வி நோக்கங்களுக்காகவே உள்ளது மற்றும் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. இணையதளத்தில் பயன்படுத்தப்படும் படங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) தளம் - அதாவது, Pixlr - பயன்படுத்தப்பட்டது. உருவாக்கப்பட்ட படங்கள் எதுவும் நிஜ வாழ்க்கை நபர்களை (வாழும் அல்லது இறந்திருந்தாலும்), இடங்கள், தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை சித்தரிக்கும் நோக்கத்துடன் இல்லை, மேலும் ஏதேனும் ஒற்றுமைகள் தற்செயலானவை.
 

©2023 BROskin. Wix.com-உடன் பெருமையுடன் உருவாக்கப்பட்டது

bottom of page